மகேஷின் "தியாகம்"
இனிய காலை பொழுது,கிளிகள் தன் நித்திரையை கலைத்து, ஊருக்கு ஒளி தரும் கதிரவன் வருகையை உரைத்து கொண்டிருந்தது.
"அப்பா நாளைக்கு தான் பா last date ,teacher submit பண்ண சொல்லி இருக்கா , 10 நிமிஷமாவது பேசியே ஆகணும், presentation பண்ணனும் எனக்கு நீ help பண்ணு ப்பா, please " என்று கெஞ்சினான் மணியின் மகன் மகேஷ்.
மணியோ "ம்ம்" என்ற சத்தம் மட்டுமே பதிலாக அளித்தான். முதுகு தண்டு பதிய படுத்து, கால்கள் இரண்டையும் பின் தள்ளி ஊன்றி, கைகளை தூக்கி தலையின் இரு பக்கமும் வைத்து , விரல்களை கால் நோக்கி திருப்பி , கைகள் இரண்டையும் ஊன்றி, இடுப்பை தூக்கி " தனுர் ஆசனம்" செய்து கொண்டிருந்த மணி முடியாமல் முனகினானா இல்லை தன் மகனுக்கு ஆமோதிக்கறானா என்று நிச்சயமாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை . பக்கத்தில் இருந்த மனைவியம், வேர்வையின் மழையில் நனைந்து தான் அணிந்து இருந்த ஆடைகளை உடம்போடு பிழிய முற்ப்பட்டு கொண்டிருந்தாள்.
மஹேஷிற்கோ தான் என்ன செய்ய போகிறோமோ என்ற பயம், மணிக்கோ உடம்பின் ரண களம் , மணியின் மனைவிக்கோ மகனுக்கு breakfast பண்ணனும் என்ற அவசரம்.
"இதற்க்கு தான் நான் yoga எனக்கு வேண்டாம் -னு சொல்றேன், எவளோ time ஆச்சு, குழந்தைக்கு பசிக்கும் என்று ஓடினாள் மணியின் மனைவி கல்பனா.
"ஏம்மா எனக்கு அப்படியே ஒரு Tea -யை போடு,சுத்தமா முடியல" என்றான் மணி. என்ன தான்டா உன் பிரச்சனை என்ன prepare பண்ணனும் -சொல்லு, என்று எதுவுமே தனக்கு தெரியாதது போல சத்தமாக கேட்டான் மணி. இவர் கிட்ட எத்தனை தரம் சொல்லிட்டோம், திரும்ப முதல்ல இருந்தா என்று நினைத்தாலும், வேறு வழி இல்லாமல் " அப்பா, நாளைக்கு தியாகிகள் தினம், நான் ஒரு தியாகியை பற்றி 10 நிமிஷம் பேசணும் please help me என்று கெஞ்சினான் மகேஷ்.
"ஏண்டா, இவளோ நாளா தெரியாதாடா ??, Prepare பண்ணாம last day -ல வந்து தியாகி பற்றி எப்படி டா பண்ண போற?", என்று tea -யுடன் அவளும் ஆவியாய் பறந்து வந்து போனாள்.
"எங்கம்மா நானும் அப்பா கிட்ட one week -ஆ கேக்கறேன், அப்பா தான் அப்ப ,இப்ப -னு சொல்லி 1-week waste பண்ணிட்டார் என்று உண்மையை assault -ஆ ராக்கெட்-அ கொளுத்தி நடூ வீட்ல விட்டுட்டு, room உள்ளே போய் ,எதுவுமே நடக்காத மாதிரி online class-ன்ற பேர்ல tv பாக்க, sorry laptop பாக்க உட்கார்ந்தான் மகேஷ்.
kitchen -இல் உப்புமா கிளறி கொண்டிருந்த கல்பனா, மசியல்க்கு மணியை அரைக்கலாமா என்ற தொனியில் பார்வையை தெறிக்க விட , கட்டையை கொண்டு அடிக்க வந்தா ஓடும் பாம்பை போல இடத்தை காலி செய்தான் .
எல்லா தைரியத்தியும் சேர்த்து கொண்டு "கல்பனா, leave this to me, talking for 10 minutes is simple, I will help him. தியாகி தானே you can pick one and we can google it ", என்றபடியே மஹேஷிடம் சென்று "டேய், let 's select the person ,first " என்றான் sundar போட்ட பிச்சையின் தைரியத்தில்.
"ஆமாம் பா ,let 's do that ", என்று மகேஷ் note book -உடன் ஒரு reporter போல மணியை பின் தொடர்ந்தான்.
எல்லோரையும் போல மேதாவியாக மணி , "டேய், கண்ணா, தியாகி-னா காந்தி தான் டா ", என்ற போது தான் Pokhran குண்டை போட்டான் மகேஷ். "Gandhi is taken by நிவேதிதா -பா"என்று கஸ்தூரிபாய் -க்கு சக்களத்தியை கொண்டு வந்தான்.
"டேய், what if Niveditha wants to talk about Gandhi ,you can also speak என்று உயர் நீதி மன்ற தீர்ப்பை தெரிவிக்க, Tom and jerry பார்த்தால் எப்படி சிரிப்பானோ அப்படி உருண்டு உருண்டு சிரித்தான். " இல்லப்பா, it is not allowed in our school , you are allowed to pick the one who is not picked by anyone , அப்படினு musical chair rules சொல்லி அமர்ந்தான்.
"ஒ, அப்போ , vallabhai patel -வனிதா பா , jhansi rani -karthik ராஜா பா, திருப்பூர் குமரன் - dhivya பா , வ.ஊ.சி-நீ வேற மாத்தி யோசி, பாரதியார் -செபாஸ்டியன் -என்று ஒவ்வொரு கணைக்கும் , எதிர் கணை தொடுத்தான். Tv -ல மஹாபாரதம் பார்த்ததன் விளைவு.
வீட்டை விட்டு வெளியே கூட ஓட முடியாத படி lockdown செய்த மோடிக்கு அடுத்த முறை யோசிச்சு தான் வோட்டு போடணும் என்றே முடிவெடுத்தான். விரைவில் அடுத்த தீர்மானம் நிறைவேற்றினான், next year மகேஷ் -க்கு new school maximum 10 students in a class தான் என்றும் நிறைவேற்றினான்.
அடுத்த வருஷம் அத பாக்கலாம் இப்போ, நாளை கதையை சொல்லு என்ற மகேஷ்-ற்கு மணியிடம் இருந்து மாலை 4 மணி வரை No reply .
"நீங்க first யோசிங்க , coffee எல்லாம் அப்புறம் தான் என்று வீட்டின் சபாநாயகர் திட்ட (திட்டி) விட்ட அறிவிப்பு."அய்யய்யோ, இவ அடி மடிலயே கை வச்சிட்டாளே , போற போக்க பார்த்தா நாளைக்கு காலைல Tea -கூட கிடைக்காதோ என்ற பயம் மணியின் முகத்தில் தாண்டவம் ஆடியது.
இரவு 9, finally மணிக்கு ஒரு ஐடியா புலப்பட்டது, தன் மகனுடன் சென்று இரவு 11 மணி வரை செயல்பட்டார்கள். கூட்டணி என்றுமே வெற்றி தான்.
நிற்காமல் ஓடிய கல்பனா, நீண்ட நித்திரைக்கு சென்று கொண்டு இருந்த சமயத்தில், " all fine and done " என்று காதில் சொல்லிய மணியை நோக்கி புன்முறுவலிட்டு தூங்க சென்றாள்.
மறு நாள் காலை, இன்று கிளிகள் மரம் சூரியன் எதுவுமே அந்த வீட்டில் தெரியாது. மகேஷ்-ற்கு presentation day . "டேய், ஒரு தரமாவது practise பண்ணினாயா 10 minutes -க்கு வருதா , நான் உன் கூடவே உட்கார்ந்துக்கிறேன் என்று ஏதோ modi 8 மணி speech range -ல கல்பனா காலைல இருந்து hyper ஆக இருந்தாள் ."இல்லம்மா , you are not allowed , Sorry in fact no parents are " என்று முகத்தில் அறைவது போல் அறை கதவுகளை தாழ் இட்டான் மகேஷ்.
வீடே full tension , ஆனால் மகேஷ் is all clear.
Yes , Children , let me hear from each one of you ", என்று principal -ன் கனிவான பேச்சு ஒலித்தது. Miss நான் -Gandhi , Miss நான் -Patel , Miss நான் -Jhansi rani ,Miss நான் .....மகேஷ் அமைதி ஆனான்.-"Shall I Tell you while am given a chance to speak "என்று ஒரு pause கொடுத்தான். வெளியில் கதவின் ஓரமாக நின்று பயம் கலந்த சந்தோஷத்துடன் இருந்த கல்பனா மணியை நோக்கிய பார்வை , என்னை நோக்கி பாயும் தோட்டாவாய் சீறி பாய்ந்தது. மணி எதுவுமே அறியாதவன் போல் தன் முகத்தை cell phone -இல் புதைத்தான்.
வேறு வழி இல்லாமல் நேரமின்மை காரணமாக மகனுக்கு breakfast செய்ய உள்ளே சென்ற பொழுது வந்தது மகேஷின் முறை.
Miss நான் ஒரு தியாகியை பற்றி பேச போகிறேன்.
*இவர் ஒரு Engineer .
* இவர் ஒரு நிறுவனத்தில் மேல் அதிகாரியாக இருந்தவர்.
*இவர் ஒரு நடன கலைஞர்.
*இவர் ஒரு பெற்றோரின் மகள்
*இவர் ஒரு மனைவி
*இவர் ஒரு தாய்.
தன் பொறியியல் கல்லூரியில் முதலாவதாக வந்து, ஒரு தலை சிறந்த நிறுவனத்தில் மேலதிகாரியாக திகழ்ந்து, நாட்டியத்தில் சென்னை-யில், புகழ்ந்து விளங்கிய சமயத்தில் தன் கணவனுக்காக எல்லாவற்றையும் விட்டு, அவன் தொழிலுக்காக ஊரை விட்டு வெளியேறி,எங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும் என் அம்மாவை பற்றிப்பேச போகிறேன் என்று சொல்லி கொடுத்ததை அக்ஷரம் பிசகாமல் பேச ஆரம்பித்தான் மகேஷ் .
மாத விடாய் காலங்களில் காலை நனைக்கும் குருதியை கழுவி விட்டு வெளியே வந்து புன் முறுவலுடன் ஒரு சோர்வையும் வெளி படுத்தாத என் அன்னையை பற்றி பேசுகிறேன் என்றான்.
எவ்வளவோ அறிவாளி என இருந்தாலும் கணவனுக்கு முன்பாக அறிவிலி போல் நடிக்கும் என் தாயை பற்றி பேச போகிறேன் என்றான்.
எல்லாவற்றையும் மறந்து, தான் கற்ற எல்லாவற்றையும் துறந்து, அந்த புளி கரைசலில் கரைந்து கொண்டு இருக்கும் என் அம்மாவை பற்றிய பேச்சு இது என்று தன்னையும் மறந்து ஓர் கர்வத்துடன் நிமிர்ந்து அமர்ந்தான் மகேஷ்.
10 நிமிடங்கள் பேசிவிட்டு,தியாகிகளை நாம் தேடி வெளியில் பார்க்கும் போது , எனோ நம் வீட்டில் இருக்கும் தியாக ஒளியை பார்ப்பதில்லை.
வெளியே வெளிச்சமாக இருப்பதற்கு கதிரவன் நிச்சயம் வேண்டும். அதற்காக, நம் வீட்டில் எரியும் தீபத்தின் ஒளி ஒன்றும் சிறியதல்ல என்று முடித்து நேர் கொண்டு பார்த்து அமர்ந்தான் மகேஷ்.
மறு முனையில் இருந்து சில வினாடிகள் அமைதி நிலவியது போல தோன்றியது.
"என்னங்க, " , என்று குரல் கல்பனாவிடம் இருந்து ஒலித்தது. "என்னன்னு தெரியல, இந்த மிக்ஸில்-சுத்தலை என்னனு பாருங்களேன் என்று motor company -இன் மேலாளராக இருந்த engineer கணவனிடம் முறையிட்டு கொண்டிருந்தாள்.
பல நிமிடங்கள் கழித்து வந்த மகேஷ், அம்மாவை கட்டிக்கொண்டு , அம்மா எனக்கு 1st prize என்று சொல்ல .கன்னத்தில் முத்தமிட்டு, கொஞ்சி பெருமையுடன் கணவனை நோக்கி கொண்டே "யாரை பற்றி ட பேசின, அம்மா கேக்கவே இல்ல " என்று கேக்க
மகேஷ் என்ன சொல்ல போகிறான் என்று மணி எட்டி பார்க்க.............
"தியாகியை பற்றிமா" என்று சொல்லி இறுக அணைத்தான்....
பல தியாக சுடர்களின் ஒளி கண்களில் படுவதில்லை. .......
------- தியாகங்கள் தொடரும்....