Thursday, November 16, 2017

இராசியான வீடு (Lucky house)

இராசியான வீடு

“டேய் வாழைக்காய் வேகட்டும் டா, அதுக்குள்ள அடுப்பில் இருந்து எடுத்து சாப்பிடாதே “ என்று மணி –யை கத்தி கொண்டிருந்தாள் அம்மா . இன்று ஞாயிற்றுக்கிழமை , ஞாயிற்றுகிழமைனாலே செம ஜாலியாக இருக்கும் அந்த வீட்டில் . காலை 8 மணிக்கு எழுந்து சோம்பேறிதனத்துடன்ஒரு காபி, Sunday னா காபி கூட சுறுசுறுப்புக்கு விடுமுறை விட, மணி எழுந்தவுடன் காபி மற்றும் எண்ணெய் –யை சூடு செய்வாள் அம்மா . எதை வேண்டுமானாலும் விட்டு கொடுக்கும் அம்மா ஏனோ எண்ணெய் குளியலுக்கு என்னைக்கும் discount கொடுத்ததே இல்லை.மணி எழும் பொழுதே, அப்பா அரைகுறை ஆடையுடன் ஏதோ மல்யுத்த வீரர் போல உடம்பெல்லாம் எண்ணெய் தடவி வலம் வந்து கொண்டிருப்பார்.

குளித்து வந்தால், வீடு முழுவதும், ஏதோ கொடைக்கானல் effectaa சாம்பிராணி புகை , அந்த புகை நடுவில் அக்கா ஏதோ “காஞ்சனா”படம் heroin மாதிரி தலை விரித்து உலர்த்தி கொண்டிருப்பாள் . எல்லோருமா சேர்ந்து 11 மணிக்கு ஒரு brunch செம கட்டு கட்டி விட்டு மணி ஊர்ந்து சென்று கை அலம்பி , மதியம் 1-30 மணி படத்துக்கு tv முன்பு செட்டில் ஆகி கொண்டிருக்க வீடே அரை குறை மப்பாக இருக்கும் . ஆனால் அம்மா மட்டும் busy, மதியம் வடை போடணுமே , கரண்ட் போறத்துக்கு முன்னாடி அரைக்கணும்னு kitchen உள்ளே செல்ல. மணி, அக்கா , அப்பா உள்பட எல்லோரும் திருப்பதி மலை ஏற தயார் நிலை.மதியம் 4 மணிக்கு அது என்ன படம் போட்டான் என்றெல்லாம் தெரியாது , எந்த மொழி படமா ஆனாலும் ஓடும். பாதி ஓடி கொண்டிருக்கும்போதே  வடை ரெடி ஆகி அத்துடன் மறுபடியும் ஒரு காபி . மணிக்கு அம்மா அதை எடுத்து வரும் வரை எல்ல்லாம் பொறுமை இருக்காது .பத்தாம் வகுப்பு சிறுவன், பத்து வயது குழந்தை மாதிரி கொஞ்சி கெஞ்சி தன் quota, கணக்குள்ள வராம ஒரு நாலு வடையை kitchen லையே அமுக்கிடுவான்.

இரவு 8 மணி, தன் சித்தி சித்தப்பா மாமா மாமி அம்மா அப்பா எல்லோரும்  கூட வீடு களைகட்டும் . இரவு 9 மணிக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு ace-சீட்டு கட்டு விளையாட்டு. அம்மா எப்பொழுதும் அப்பாவிற்கு அடுத்து தான் அமர்வாள் . அது என்ன மாயமோ, என்னமோ, தெரியாது . அப்பா எது போட்டாலும் வெட்டுவாள். அப்பாவும் சிரித்து கொண்டே எடுத்து கொள்வார். இரவு 11 மணி வரை வீடே குதூகலம், சந்தோஷம், அரட்டை, மகிழ்ச்சி .மணி 11 அடித்தால் எல்லாம் close எலாவற்றையும் மூட்டை கட்டி , வந்த சொந்தம் எல்லாம் ஒவொன்றாக கலைய, 12 மணிக்கு அப்பாவின் மேல் சிறு குழந்தையாய் காலை மேலே தூக்கி படுக்க செல்லும் போது, அந்த வீட்டில், “மகிழ்ச்சி தாய்” தாண்டவமாடிவிட்டு உறங்க செல்ல முற்படுவாள்.

நாளும் வந்தது, அக்காவிற்கு திருமண நிச்சயம் .மணிக்கு பாதி புரியும் முன்பே, அக்காவின் திருமணம், வீடே குதூகலம் , வீடு முழுக்க சந்தோஷம்,” டேய், மணி , “அக்காவிற்கு கல்யாணம் வந்தாச்சு , உனக்கு line clear”’னு friends எல்லாம் சொல்லும் போது இனம் தெரியாத சந்தோஷம் . கல்யாணத்திற்கு வந்த உறவினர்கள் எல்லாம் “இந்த வீடு எவ்ளோ ராசி பார்த்தியா “, ‘வீடு முழுக்க ஒரே சந்தோஷம்ரொம்ப நல்ல வீடு, எப்பவுமே சந்தோஷம் நிரம்பிய வீடு, செல்வம் கொழிக்கும் வீடு “ என்று சொல்லும் பொழுதே “ எல்லாம் உங்க ஆசீர்வாதம் சித்தப்பா” என்று சொல்லி விட்டு சென்றாள்.

“கல்யாணம் தட புடல் “, அசத்திட்டேள் போங்கோ என்று கடைசி உறவினர் வெளி ஏற , ஏனோ அம்மா அப்பா முகத்தில் ஒரு tiredness, இருந்தாலும் சிரிப்பு குறையவில்லை. அது tiredness இல்லை , அன்று அவர்களின் முதுமையின் முதல் படின்னு மணிக்கு புரியவில்லை.

நாட்களும் வேகமாய் நகர்ந்தன , மணி படித்து முடிக்கும் நாள் வந்தது. மேல் படிப்புக்கு வெளி நாடு செல்ல ஆயுத்தம்.வீடு முழுக்க நண்பர்கள், எதற்குமே, எவருக்குமே நேரம் இல்லை. வீடே சக்கரம் கட்டி ஓட்டம் .நண்பர்கள், துணி புத்தகம் வாங்க ஓட்டம் , மணியும் அப்பாவும், படிக்க கடன் வாங்க வங்கிக்கு ஓட்டம், அம்மா சமையல் அறையில் தேவையானவற்றை கொடுத்து விட , எல்லா பொடிகளையும் அரைக்க ஓட்டம். வீட்டில், அமளி துமளி, அனாலும் எல்லா எடத்துலயும் சிரிப்பு , மகிழ்ச்சி, வந்த நண்பன் ஒருவன் சொன்னான் “ செம, happy house , மச்சி”, “ செம , lucky house , எவளோ happiness பாரேன்” என்ற பொழுது “ எல்லாம் உங்களால தான் happiness” என்று mixie-யையும் தாண்டி அம்மா kitchen-ல இருந்து கூவினாள்.


நாட்கள் பறந்தன, மணிக்கும் திருமணம் வர,அந்த வீட்டில் மறுபடியும் குதூகலம் மகிழ்ச்சி, கொண்டாட்டம் பொங்கியது.” வீட்டிற்கு மருமகள் வந்தாச்சு போல “ என்று பக்கத்து ஆத்து மாமி உள்ள நுழைய “ நல்ல ராசியான வீடு அம்மா இது, எப்பவும் சந்தோஷம் மட்டுமே நிறைஞ்சு இருக்கு பாரேன்” என்று கூறும் பொழுது தான் மணிக்கும் தோன்றியது. ஆமாம் , இல்லையா எவளோ ராசியான வீடு , எவளோ சந்தோசம் , இந்த வீட்டை என்னைக்கும் வச்சிக்கணும் என்று முடிவு எடுத்தான். தன் கல்யாணத்தை முடித்து வீடு திரும்பும்போது தான், “ இவங்களுக்கு எப்போ இவளோ வயசாச்சு என்று அம்மா அப்பாவை பார்த்து வியந்த பொழுது விளையாட்டாக 20 வருடங்கள் கடந்து இருந்தது.

அன்றிலிருந்து ஒவ்வொரு பிறந்த நாளும் கொண்டாட்டம் தான் . அப்பா, அம்மா குழந்தைகள், தன், மற்றும் மனைவியின் பிறந்த நாள் கொண்டாடும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி தான் . ராசியான வீட்டின் நினைப்பு கூடிகொண்டே போனது.ஆனால் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சி காலங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரவில்லை . வருஷத்தில் 3-4 முறை பிறந்த மற்றும் பண்டிகை நாட்களில் மட்டுமே வந்தது.daily office work-கே time இல்லை. sunday எண்ணெய் குளியல் எல்லாம் காவிரி ஆறாக வற்றின. குழந்தைகள் வீட்டில் ஓடி ஆடுவதே சந்தோசம் தான், ஆனால் மகிழ்ச்சி கரை புரண்டு யெலாம் ஓடவில்லை .

நாட்கள் மேலும் ஓடின, அம்மாவிற்கு இன்று பிறந்த நாள் , மிகவும் விமரிசையாக கொண்டாட வேண்டிய நாள் . 70 ஆம் பிறந்த நாள் ஆச்சே, எவளோ பெரிய தினம்,அந்த ராசியான , சந்தோஷமான வீட்டில் ஏனோ, மகிழ்ச்சி இல்லை ராசியான வீடு இருக்கிறது , அதை கொண்டாட ஏனோ மணியின் அம்மாவும் அப்பாவும் அவனோடு இல்லை, விடை பெற்றுக்கொள்ளாமல் , வேறு உலகிற்கு சென்று பல வருடங்கள் ஓடி விட்டிருந்தது....இன்று மணிக்கு புரிந்தது,அந்த வீட்டில் ராசியினால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் இல்லை. அந்த வீட்டில் இருந்த பெற்றோரே அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் எல்லாம். வீடு, சுவருக்கு உயிர் ஊட்டியது பெற்றோர் என்னும் உறவே தவிர வேறு இல்லை.

மணி இன்று மானசீகமாக அந்த வீட்டை வணங்கினான். உயிர் இல்லை என்றால் என்ன? உடலாக “ராசியற்ற”வீடு உடன் இருக்கிறதே!!!!!

many many more happy returns of the day, அம்மா “

                                                                                                அன்புடன்,
                                                                                                மணி